10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. 5 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது !
10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. 5 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது !
கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இன்றி போராடி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றசம்பவங்கள் நடந்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ஹரியானாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குவந்த ஒருவர் சிறுமியை கடத்தியுள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுமியை அருகில் இருந்த பள்ளிக்கு தூக்கிச்சென்றார். தற்போது ஊரடங்கினால் பள்ளி நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு கடத்திச்சென்ற நபரின் நண்பர்கள் 8 பேர் ஏற்கெனவே காத்திருந்தனர். அவர்கள் 9 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி அச்சத்தில் இருந்துள்ளார். மேலும் பெற்றோரிடமும் கூறவில்லை.
ஆனால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். சில நாட்களுககு பின்னர் அந்த வீடியோவை தங்கள் பிற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்ததால் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வைரலானது. வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து சிறுமியின் பெற்றோருக்கு இந்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் மே 14ஆம் தேதி நடந்தாலும் இரண்டு வாரங்களுக்கு பிறகே போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் தற்போது 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர்களில் 5 பேர் சிறுமியின் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரில் 5 பேர் 10 முதல் 12 வயதிற்குள் உடைய சிறுவர்கள் என்பதும் அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது.
newstm.in