உஷார்..! வங்கிளுக்கு அடுத்தடுத்து 9 நாட்கள் விடுமுறை! சரியா ப்ளான் பண்ணிக்கோங்க!
உஷார்..! வங்கிளுக்கு அடுத்தடுத்து 9 நாட்கள் விடுமுறை! சரியா ப்ளான் பண்ணிக்கோங்க!
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும்.
பொதுவாக ஜனவரி மாதத்தில் பண்டிகை நாட்கள் நிறைந்து காணப்படுவதால் அதிக விடுமுறை இருக்கும். ஆனால் அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறைவாகவே இருக்கும். இதனை அனைவரும் பள்ளி நாட்களிலேயே அறிந்திருப்பர்.
அதனையே பெரும்பாலானோர் வங்கி வேலை நாட்களை திட்டமிட்டு பணபரிவர்த்தனை செய்வர். அந்த வகையில், இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது காலச்சிறந்தது என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
அதாவது, ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
அதன்படி மார்ச் 11 ம் தேதி மகா சிவராத்திரி, மார்ச் 29, மார்ச் 30ம் தேதி விடுமுறை, மார்ச் 2 ம் தேதி சனிக்கிழமை, மார்ச் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகும். மேலும் மார்ச் 15 மற்றும் 16ல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர இறுதி கணக்கை முடிக்க வேண்டியிருக்கும் மார்ச் மாதத்தில் வங்கிகள் 9 நாட்கள் விடுமுறை இருப்பது வாடிக்கையாளர்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
newstm.in