வீதியில் அடுத்தடுத்து விழுந்து உயிரிழந்த 9 நாய்கள்.. மக்கள் அதிர்ச்சி !!

வீதியில் அடுத்தடுத்து விழுந்து உயிரிழந்த 9 நாய்கள்.. மக்கள் அதிர்ச்சி !!

Update: 2022-04-25 09:23 GMT

விஷம் கலந்த உணவை கொடுத்து 9 தெருநாய்களை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா நகர் பகுதியில் தனி குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள ராயசந்திரா பகுதியில் வீதிகளில் ஆங்காங்கே தெரு நாய்கள் செத்து கிடந்துள்ள. இதில், ஒரு நாய் மட்டும் உயிருக்கு போராடியபடி கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றார். 

இதனையடுத்து அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தப்போது, ஒட்டு மொத்தமாக 9 நாய்கள் செத்து கிடந்தன. அந்த தெருநாய்கள் அப்பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சுற்றித்திரிந்ததுடன், இரவு நேரங்களில் குரைத்து வந்ததாக தெரிகிறது. தெருநாய்களின் தொல்லை காரணமாக மர்மநபர்கள் உணவில் வைத்து கொன்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை கொன்றவர்கள் குறித்து, சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

Tags:    

Similar News