இரவில் நிகழ்ந்த கோர விபத்து.. பெண்கள் உள்பட 9 பேர் பலி !!

இரவில் நிகழ்ந்த கோர விபத்து.. பெண்கள் உள்பட 9 பேர் பலி !!

Update: 2022-05-30 07:15 GMT

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பல்நாடு இரவில் நடந்த விபத்து ஒட்டுமொத்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளத. பல்நாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் ஸ்ரீசைலம் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊரான பல்நாடு திரும்பினர். வழியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் மீது டாடா ஏஸ் வாகனம் அதே வேகத்தில் பயங்கரமாக மோதியது.
 


ட்ரக் மீது மோதிய வேகத்தில் சாலையில் வாகனம் தலைகீழாக உருண்டது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டு குர்ஜாலா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், உயிரிரந்தவர்களின் 9 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
 
விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் ஸ்ரீசைலம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து நடந்துள்ளதாகவும், டாடா ஏஸ் வாகனத்தின் ஒட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


newstm.in
 

Tags:    

Similar News