திருமணத்திற்கு சென்றபோது சோகம்.. மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலி..!

திருமணத்திற்கு சென்றபோது சோகம்.. மரத்தில் ஜீப் மோதி 9 பேர் பலி..!

Update: 2022-05-22 04:45 GMT

கர்நாடக மாநிலம் தார்வார் அருகே உள்ள நிகதி பகுதியைச் சேர்ந்தவர் நீலவ்வா (60). இவருடைய மகளுக்கு நேற்று இரவு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இன்று காலை, அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, நிகதி பகுதியைச் சேர்ந்த 21 பேர் ஒரு ஜீப்பில் சென்றனர்.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மணமகளின் தாய் நீலவ்வா, ஷில்பா மற்றும் ஹரீஷ் ஆகியோர் உட்பட 7 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தார்வார் புறநகர் போலீசார் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News