ஏப்ரல் 19ம் தேதிக்குள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி! ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு!
ஏப்ரல் 19ம் தேதிக்குள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி! ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு!
உலக அளவில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலகத்தில் அதிக அளவு பாதிப்பை பெற்றுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. மார்ச் 29ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 63,000 பேர்.
இதனையடுத்து அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் நாடு முழுவதும் சராசரியாக 27 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14.58 கோடி பேர். 73% முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும் ஏப்ரல் 19 ம் தேதிக்குள் அமெரிக்காவில் 90%பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடப்படும் முகாம்கள் வசிப்பிடத்திற்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் 17 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தற்போது 40 ஆயிரம் முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.பதவியேற்ற 100 நாட்களில் 2 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.