ஒரே நேரத்தில் பொதுமக்களில் 900 பேர் சுட்டுக்கொலை.. ரஷ்யா மீது பகீர் குற்றச்சாட்டு !!

ஒரே நேரத்தில் பொதுமக்களில் 900 பேர் சுட்டுக்கொலை.. ரஷ்யா மீது பகீர் குற்றச்சாட்டு !!

Update: 2022-04-16 09:23 GMT

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சுமார் 900 பேர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக அந்நாட்டு அரசு பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50ஆவது நாட்களை தாண்டியுள்ளது. தொடக்கத்தில் நிதான தாக்குதலை கடைபிடித்த ரஷ்யா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பல கட்டிடங்கள் சிதைந்தும் தரைமட்டமாகியும் உள்ளன. 

சுமார் 50  லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். இதனிடையே ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி தந்து வருகின்றன. கருங்கடல் பகுதியில் நின்றிருந்த மோஸ்க்வா என்ற ரஷ்யாவின் பிரமாண்ட கப்பலை உக்ரைன் ஏவுகணையை செலுத்தி கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை உக்ரைனும் ஒப்புக்கொண்டிருந்தது.
 
இந்நிலையில் தங்கள் நாட்டு தலைநகர் கீவ் சுற்றுப்புறங்களில் 900 சடலங்கள் கிடப்பதாக உக்ரைன் காவல் துறை தெரிவித்துள்ளது. கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக ரஷ்ய படைகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என உக்ரைன் காவல் துறை தெரிவித்துள்ளது. சடலங்களில் பெரும்பாலானவை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடங்கள் இருப்பதாகவும் உக்ரைன் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கார்கிவ் நகரத்திள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்கியதில் 7 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

    

Similar News