90'ஸ் கிட்ஸ்-களின் WWE நாயகன் 'டிரிபிள் எச்' எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி !!
90'ஸ் கிட்ஸ்-களின் WWE நாயகன் 'டிரிபிள் எச்' எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி !!
பிரபல WWE அதிரடி வீரர் டிரிபிள் எச், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பால் மைக்கேல் லிவஸ்க் (Paul Michael Levesque ) என்ற இயற்பெயர்கொண்ட, பரவலாக டிரிபிள் எச் என மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் பகுதிநேர நடிகர். நான்கு முனை வளையத்துக்குள் எதிர்வீரரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ரத்தம் தெறிக்க நடைபெறும் சண்டை தான் WWE. இதில் பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் அதில் முக்கிய மாணவர் தான் டிரிபிள் ஹெச் (triple h). அதிரடி ஆக்சனுக்கும் அவ்வப்போது வளையத்துக்குள் எதிர் வீரர் மற்றும் நடுவரின் கவனத்தை திசைத்திருப்பியும் வெற்றிபெற்று ரசிகர்களை மகிழ்விப்பார்.
14 முறை உலக சாம்பியனான டிரிபிள் எச், WWE போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நான் மீண்டும் சண்டையிட மாட்டேன். என் மார்பில் ஒரு டிஃபிபிரிலேட்டர் உள்ளது. இனி அதில் நேரடியாக தாக்குவது ஆபத்தை விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பரில், டிரிபிள் எச் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக WWE அறிவித்திருந்தது. இதனை சுட்டிக்காட்டியே அவரும் பேசினார்.
டிரிபிள் எச்-க்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரகச் செயல்பட்டு வருகிறார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார்.
BREAKING: @TripleH announced his retirement from in-ring competition on @espn @firsttake with @stephenasmith. pic.twitter.com/qnyw9NVtv4
— WWE (@WWE) March 25, 2022
newstm.in