கேரள மாநிலம் திரிசூர் மாவட்டம் வல்லசிரா பகுதியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன்(வயது 33), தனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்துள்ளார். எனினும எந்த தரகர்களையும் அணுகாமல் தானவே எளிதாக பெண் தேடி வருகிறார்.

அதாவது, தான் நடத்தி வரும் சிறிய தேநீர் கடையின் முகப்பில், ஒரு அட்டையை தொங்கவிட்டுள்ளார். அதில், 'வேலைக்கு ஆள்கள் தேவை, கடை வாடகைக்கு உள்ளது' என்பது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை. மாறாக, 'வாழ்க்கைத் துணை தேவை. ஜாதி, மதம் கட்டாயமில்லை' என, எழுதி அதில் அவரது மொபைல் எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.

இந்த படத்தை அவரது நண்பர்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர செய்துள்ளார். தற்போது கேரளாவில் அவரது விளம்பரத்துடன் கூடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து உன்னிகிருஷ்ணன் கூறியதாவது, தற்போது திருமணம் செய்ய விரும்புகிறேன். தரகர்களையோ, திருமண தகவல் மையங்களையே நாட எனக்கு விரும்பவில்லை. எனக்காக எனது நண்பர்களும் அவரது குடும்பத்தினரும் மணப்பெண்ணைத் தேடி வருகிறார்கள். ஆனால் எங்கும் அமையவில்லை.

இதனால்தான் இப்படி ஒரு விளம்பரத்தை செய்ய முடிவு செய்தேன். விளம்பரத்தைப் பார்த்து மலேசியா, ஆஸ்திரேலியா, பிரிட்டனிலிருந்து எல்லாம் எனக்கு திருமண விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லக் கூட நேரமில்லாமல் போய்விட்டது, என்று அவர் கூறினார்.

Tags: