92 எல்லாம் ஒரு ஸ்கோரா? நடிகை தீபிகா படுகோனே-க்கு எதிராக திரும்பிய அவரது கிண்டல் ட்விட் !!

92 எல்லாம் ஒரு ஸ்கோரா? நடிகை தீபிகா படுகோனே-க்கு எதிராக திரும்பிய அவரது கிண்டல் ட்விட் !!

Update: 2021-09-21 18:25 GMT

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ரன்னில் படுமோசமாக சுருண்டது.

பின்னர்  93 ரன்கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், பெங்களூரு அணியின் ரசிகையான பாலிவுட் நடிகை தீபிகா படுகேனேவின் ட்விட்டர் பதிவு அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 

கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 92 ரன்களுக்கு சுருட்டி பெங்களூரு அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
பெங்களூரு அணியின் ரசிகையான தீபிகா படுகோனே அந்த ட்வீட், நேற்று பெங்களூரு 92 ரன்னில் ஆல் அவுட் ஆனத்தை தொடர்ந்து மீண்டும் வளம் வந்தது. பலரும் பெங்களூரு அணியையும் நடிகை தீபிகா படுகோனேவையும் கலாத்தனர்.
 


newstm.in

Tags:    

Similar News