93 காவல் ரோந்து வாகனங்கள்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
93 காவல் ரோந்து வாகனங்கள்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற 2021 - 2022-ம் ஆண்டுக்கான காவல் துறை மானிய கோரிக்கையின் போது, ‘நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை வலுப்படுத்தும் விதமாக, பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும்.
மேலும், 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் காவல் ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும்’ என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, சென்னையில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாகவும், ரூ.14.71 கோடியில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.