மனைவியுடன் பைக்கில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். 

பீகார் மாநிலம் காசிகர் மாவட்டம் கேலாபரி கிராமத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் மேக்நாத் யாதவ். இவர் இன்று காலை தனது மனைவியுடன் பைக்கில் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு பின்னர் இருவரும் அதேபைக்கில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

சாலையில் வரும்வழியில் அடையாளம் தெரியாத சிலர் மேக்நாத் யாதவை வழிமறைத்துள்ளனர். அப்போது ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பதற்குள் அக்கும்பல் மேக்நாத் யாதவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மனைவி உடலிலும் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அக்கும்பல் தப்பியோடியது. இதனிடையே சாலையில் சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அக்கும்பல் சென்ற பிறகு படுகாயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்துசென்று அவரது உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பட்டப்பகலில் சாலையில் வைத்து தொழிலதிபர் சுட்டுக்கொலை  செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

newstm.in

Tags: