இன்று முதல் நாடு முழுவதும் முற்றிலும் தடை!!

இன்று முதல் நாடு முழுவதும் முற்றிலும் தடை!!

Update: 2022-07-01 06:45 GMT

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக ஹிமாலச்சப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு  காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா  உள்ளிட்ட மாநிலங்கள் முழு தடை விதித்தன.

கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நெகிழி பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டனகடந்த 2020 ஆம் ஆண்டு அண்டைய மாநிலமான கேரளா நெகிழிகளுக்குத் தடை விதித்தது.

2019ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப்  பைகள் மற்றும் பாலித்தீன் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜூலை 5ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பஞ்சாப் அரசும் அண்மையில் தடை விதித்தது.

இந்நிலையில்குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை இன்று முதல் நாடு முழுவதும்  தடை செய்யப்படும் என மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

newstm.in

Similar News