நண்பனை சரமாரியாக வெட்டிய பிரபல நடிகர் கைது.. பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் !

நண்பனை சரமாரியாக வெட்டிய பிரபல நடிகர் கைது.. பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் !;

Update: 2022-07-26 19:15 GMT

பிரபல மலையாள நடிகர் வினீத் தட்டில் டேவிட். அங்கமாலி டைரிஸ், அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். வினீத் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள புத்தன்பீடிகா பகுதியில் வசித்து வருகிறார். இவர், ஆலப்புழாவை சேர்ந்த அலெஸ்சிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3 லட்சத்தை அலெக்ஸிடம் திருப்பி கொடுத்துள்ளார்.

ஆனால் மீதமுள்ள ரூ.3 லட்சம் பணத்தை வினீத் தட்டில் டேவிட் திருப்பி தராமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதன் மூலம் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. பணம் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அலெக்ஸ் மீதமுள்ள ரூ. 3 லட்சம் பணத்தை திருப்பி கேட்பதற்காக நேற்று மாலை நடிகர் வினீத் தட்டில் டேவிட் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த நடிகர் வினீத் தட்டில் டேவிட் தனது வீட்டில் இருந்த வாளை எடுத்து அலெக்ஸை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலெக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடிகர் வினீத் தட்டில் டேவிட் மீது வழக்குப் பதிவு செய் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News