மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து.. சிக்கிய பிரபல தொழிலதிபர் !!

மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து.. சிக்கிய பிரபல தொழிலதிபர் !!

Update: 2022-07-07 06:45 GMT

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த ஒரு நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதாவது, சிலர் தங்களது மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து நடத்திய நிகழ்வு தான் அது. இதற்காக அவர்கள் ஒரு குழுபோன்றே செயல்பட்டு அவ்வப்போது இதுபோன்று உல்லாச விருந்து நடத்தியது அம்பலமானது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இது போன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. குர்காம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு 30 வயதில் மனைவி உள்ளார். டெல்லியில் அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு தொழில் அதிபர் தனது இளம் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார். இதற்கு மனைவி மறுத்தாலும் விடுவதில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் மனைவியை மிரட்டி அவர் இதுபோன்ற விருந்தில் பங்கேற்க வைத்தார். இந்த நிலையில், தொழிலதிபர் தனது சகோதரருடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை வற்புறுத்தினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தார். இதனால் அந்த தொழில் அதிபர் மனைவியை உடல் ரீதியாக சித்ரவதை செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் வீட்டில் இருந்து வெளியேறி நடந்த கொடூரம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார். அதன்பின்னரே இந்த தகவல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அப்பெண் கூறிய புகாரில் எனது கணவர் என்னை கட்டாயப்படுத்தி டெல்லியில் நடந்த மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு அழைத்து சென்றார். இதனால் நான் உடல்ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டேன். புகார் அளித்தால் நான் வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

எனவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக தொழில் அதிபர் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

 
 
 

Tags:    

Similar News