ஐபோனை ரிப்பேர் செய்ய மறுத்த பிரபல கடைக்கு அபராதம்! நீதிமன்றம் அதிரடி!!

ஐபோனை ரிப்பேர் செய்ய மறுத்த பிரபல கடைக்கு அபராதம்! நீதிமன்றம் அதிரடி!!

Update: 2022-07-06 12:29 GMT

தேனி மாவட்டத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்த திலக் என்பவருக்கு அவரது தாய் மீனா, கடந்த 20ஆம் தேதி தேனி பழை பேருந்து நிலையம் அருகே உள்ள பூர்விகா கடையில் ரூ.22,500 கொடுத்து ஆப்பிள் போன் 5எஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

செல்போன் வாங்கும்போது பூர்விகா ஊழியர்கள் ஒரு வருடம் வாரண்டி உள்ளது என்று கூறியுள்ளனர். இந்நிலையில், வாங்கி 5 மாதத்திற்குப் பிறகு போன் பழுதடைந்தது. இதையடுத்து செல்போனை எடுத்துச் சென்று பூர்விகா நிறுவனத்தில் மீனா காட்டியுள்ளார்.

அப்போது அவர்கள் ஒரு வாரத்தில் பழுது பார்த்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். ஒருவாரம் கழித்து சென்றபோது செல்போனில் தண்ணீர் விழுந்ததால் வாரண்டியில் பழுது நீக்கி தரமுடியாது என கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மீனா செல்போன் தண்ணீரில் விழவில்லை என கூறியுள்ளார். ஆனால் பூர்விகா நிறுவனம் இவரின் பேச்சை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் வேதனையடைந்த மீனா தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதிய செல்போனை வழங்க வேண்டும் அல்லது அதற்கான தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் அவருக்கு ரூ. 2.5 லட்சம் அபராத தொகை ஒரு மாதத்திற்குள் பூர்விக நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

newstm.in

Similar News