காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை !!

காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை !!;

Update: 2022-07-19 18:32 GMT

ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா. இளம் வீராங்கனையான இவர் சமீபத்தில் நடந்துமுடிந்த பிரெஞ்சு ஓப்பன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார். டென்னிஸ் போட்டிகளை தாண்டி பொது வாழ்க்கையிலும் பரபரப்பாக பேசப்படக்கூடியவர்.

இந்த நிலையில் இவர் தற்போது தனது தோழி நடாலியா ஜாபியாகோ-வை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். விளையாட்டு உலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி அளித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் ஒருபால் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் உள்ளன.

தனது காதல் விவகாரம் குறித்து பேசிய டாரியா கசட்கினா, பிறருக்காக மறைவில் வாழ்வது அர்த்தமற்றது. நாம் நிம்மதியாக வாழ்வது மட்டுமே முக்கியம். விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் இது பற்றி பேசுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன், என கூறியுள்ளார். டாரியா தான் காதலித்து வரும் தோழியின் புகைப்படம் ஒன்றை முதல்முறையாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

இருவரும் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

newstm.in
 

Tags:    

Similar News