சேலம் சின்னத்திருப்பதியில் வளைகாப்புக்கு மறுநாள் நிறைமாத கர்ப்பிணி சாவு!!
சேலம் சின்னத்திருப்பதியில் வளைகாப்புக்கு மறுநாள் நிறைமாத கர்ப்பிணி சாவு!!
சேலம் மாவட்டம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தமிழரசி கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் ராஜேஷின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று இரவு 11 மணியளவில் கர்ப்பிணியான தமிழரசிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய மறுநாளே அவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.