அக்னிபத் திட்டத்தின் மூலம் 17 முதல் 23 வயதுடைய திருமணம் ஆகாத இரு பால் இளைஞர்களும் இந்திய கடற்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் மொத்த காலியிடங்கள் 2800. இதில், 560 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ​வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் பாடமாக கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

இதற்கு, 17.05 வயது முதல் 21 வயது வரையிலான, திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்திய கடற்படையில் அக்னிவீரராக விண்ணப்பிப்பவர்கள் ab-initio பயிற்சி முடியும் வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் ab-initio பயிற்சியின் போது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகக் கண்டறியப்பட்டாலோ, சேவையிலிருந்து நீக்கப்படலாம்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். 2022 ஜூலை 15 முதல் 20200 ஜூலை 22 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindiannavy.gov.in. பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது சரியான விவரங்கள். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் கடைசி தேதிக்கு முன்னரே திருத்தம் செய்து கொள்ள வேண்டும். கடைசித் தேதிக்குப் பிறகு திருத்தம் செய்ய இயலாது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் மொத்தம் 45,000 பேருக்கு வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதலாவது ஆண்டில் 30,000 ரூபாய் சம்பளமும், இரண்டாம் ஆண்டில் 33,000 ரூபாய், மூன்றாம் ஆண்டில் 36,500, 4-வது ஆண்டில் 40,000 ரூபாய் சம்பளமும் வழங்கப்படும்.