இனி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியல்!!

இனி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியல்!!

Update: 2022-07-14 17:06 GMT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்குகி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப் போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

மேலும் நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

அதே போல், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் உள்ளன. இவற்றை பயன்படுத்தினால் அவை தலைவர்கள், அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News