ஒரு லிட்டர் டீசல் ரூ.100ஐ கடந்தது… பெட்ரோல் விலையும் உயர்வு!!
ஒரு லிட்டர் டீசல் ரூ.100ஐ கடந்தது… பெட்ரோல் விலையும் உயர்வு!!
பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வரலாறு காணாத உச்சமாக டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து, நூறு ரூபாயைக் கடந்து, 100.18 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சிலிண்டர் விலை அதிகரிப்பால், சென்னையில் டீ, காபி விலை 3 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
newstm.in