53 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன தாய்... மகள்கள் தான் ஆசிரியர்கள்!!

53 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் ஆன தாய்... மகள்கள் தான் ஆசிரியர்கள்!!

Update: 2022-07-07 19:57 GMT

திரிபுராவை சேர்ந்த ஷீலா ராணி (53) என்பவருக்கு இள வயதிலேயே திருமணம் நடைபெற்றதால் அவரின் கல்வி பாதியிலேயே தடைபட்டது. பின்னர் முழுநேர குடும்பத் தலைவியாக இருந்து வீட்டைக் கவனித்து வந்தார்.

இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவரும் உயிரிழந்துவிட்டார். இதனால் தங்களது இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்துப் படிக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் தங்களது தாயின் கல்வி படிப்பை மீண்டும் தொடரும் படி வலியுறுத்தினர். இதையடுத்து ஷீலா ராணி மகளின் விருப்பத்திற்காகவும், தனது கனவுக்காகவும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடிவு செய்தார்.

இதையடுத்து பிள்ளைகள் தங்கள் தேர்வுடன் சேர்த்து தாய்க்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதவும் தாயார்படுத்தி வந்தனர். பின்னர் தங்கள் பிள்ளைகள் உதவியுடன் ஷீலாவும் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதினார். அவரின் பெண் பிள்ளைகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 10ஆம் வகுப்பில் தாயும், 12ஆம் வகுப்பில் 2 மகள்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஷீலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

newstm.in

Similar News