வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை கடித்த விஷ பாம்பு..!!

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை கடித்த விஷ பாம்பு..!!;

Update: 2022-07-25 14:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டதைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (70).அவர் அதிகாலை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுவிரியன் பாம்பு, முதியவரின் கால் கட்ட விரலில் கடித்தால் வலியால் துடித்த பழனிசாமி, கத்தி கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு எழுந்த முதியவரின் மனைவி அன்னக்கிளி (60), உடனடியாக அவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு முதியவர் பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஷப் பாம்பு கடித்து பலியான பழனிச்சாமிக்கு ஏழுமலை (40), திருநாவுக்கரசு (35) ஆகிய இரண்டு மகன்களும், அலமேலு (30) என்கிற மகளும் உள்ளனர். உயிரிழந்த பழனிச்சாமியின் மனைவி அன்னக்கிளி, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News