ஒரு வழியா நிம்மதி பெருமூச்சு.. தமிழகத்தில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு !!
ஒரு வழியா நிம்மதி பெருமூச்சு.. தமிழகத்தில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு !!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.26 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 5.09 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் எப்போது முடியும் என இந்த கொரோனா தாக்கம் என மக்கள் எண்ணி வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்திலும் கொரோனா மூன்றாவது அலை மிகவேகமாக பரவியது. தினசரி பாதிப்பு முப்பது ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது 2,000க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,634 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 960 பேர் ஆண்கள், 674 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 951ஆக குறைந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளார். இதில் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது.
இன்று 7,365 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 64 ஆயிரத்து 13ஆக அதிகரித்துள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in