சென்னை பல்லாவரம் சாலையில் பாலத்திற்கு அடியில் ஏற்பட்ட திடீர் தீ..!!

சென்னை பல்லாவரம் சாலையில் பாலத்திற்கு அடியில் ஏற்பட்ட திடீர் தீ..!!

Update: 2022-07-21 04:30 GMT

சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பெரிய ஏரி அமைந்துள்ளது. அங்கு கழிவு பொருட்கள், குப்பைகள் போன்றவை கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஏரிகளை இணைக்கும் பாலத்தின் கீழ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகைகள் சூழ்ந்தன. தீப்பற்றி ஏரிந்து, வெளியேறும் கரும்புகையால் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் பாலத்திற்கு அடியில் இருந்து லேசான வெடி சத்தம் கேட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். 

பின்னர் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பாலத்தின் அடியில் இருந்து வந்த கரும்புகையை அணைத்தனர். 


இந்த தீவிபத்து தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கரும்புகை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News