ஒரே பெண்ணை மூன்று முறை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!!

ஒரே பெண்ணை மூன்று முறை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!!

Update: 2022-03-29 04:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று மதங்களின் முறைப்படியும் நடத்தவேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்.

அவரது ஆசைக்கு அவரது பெற்றோரும், மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த புவனேஸ்வரியை மூன்று மதங்களின் சடங்குகளின்படி திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். இந்த திருமணத்திற்காக மூன்று மதங்களின் முறைப்படி மூன்று விதமாக பத்திரிகை அச்சிட்டு நண்பர்களுக்கு வழங்கியுள்ளார்.

முதல் நாளில் கிறிஸ்துவ மத முறைப்படியும், இரண்டாவது நாள் முஸ்லிம் மதத்தின் படியும், மூன்றாவது நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துள்ளார். புருஷோத்தமனின் இத்தகைய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Similar News