விரைவில் சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே ஏசி ரயில்..!!

விரைவில் சென்னை பீச் - செங்கல்பட்டு இடையே ஏசி ரயில்..!!

Update: 2022-05-20 13:06 GMT

சென்னை மெட்ரோ ரயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தற்போது அதிகளவு இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதியுடன் மின்சார ரயில் தேவை என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த மார்க்கத்தில் அதிக அளவு பயணிகள் மின்சார ரயிலை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் சென்று திரும்புவோர் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இவ்வேளையில் குளிர்சாதன மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இதற்கு தேவைப்படுவதால் அதை தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான செயல்திட்டம், இயக்கம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரயில்வே அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மாநில அரசின் தேவை குறித்து ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே விரைவில் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளது.

குளிர்சாதன மின்சார ரயில் தேவையின் அவசியத்தையும், அதற்கான செலவு மற்றும் திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்யவும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News