#BREAKING:- அதிமுக வேட்பாளர் மரணம்.. தேர்தல் ஒத்திவைப்பு.. அலுவலர் தகவல்..!

#BREAKING:- அதிமுக வேட்பாளர் மரணம்.. தேர்தல் ஒத்திவைப்பு.. அலுவலர் தகவல்..!

Update: 2022-02-10 15:26 GMT

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தேர்தலில் தோல்வியை சந்தித்து விடுவோமோ என்ற  பயம் காரணமாக ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜானகிராமன் மரணத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் 36 வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Similar News