வெற்றி அறிவிப்பை கேட்டதும் கதறி அழுத அதிமுக வேட்பாளர்- அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் !!
வெற்றி அறிவிப்பை கேட்டதும் கதறி அழுத அதிமுக வேட்பாளர்- அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் !!
வெற்றி அறிவிப்பை கேட்டு ஆனந்தத்தில் கதறி அழுத அதிமுக வேட்பாளரால் தேர்தல் அதிகாரிகள் திகைத்துப்போயினர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது சென்னை மாநகராட்சியை எந்த கட்சி பிடிக்கிறது என்பது. ஆனால் எதிர்பார்த்தப்படியே திமுக வெற்றிவாகை சூடியுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 11 உட்பட்ட 13 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மதுரவாயல் அடையாளம்பட்டு எம்ஜீஆர் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் 145 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியநாதன் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 1,895 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமாக சத்தியநாதன் 6,152 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த அறிவிப்பை தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் சத்தியநாதன் தன்னை மறந்து கண்கலங்கினார். மேலும் அதிகாரிகள் முன் இரு கை கூப்பி கதறி கதறி அழுததும் நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த அதிமுகவினர் அவரை உற்சாகப்படுத்தினார். வெற்றி சான்றிதழைப் பெற்ற கொண்டு வெளியே வந்த வெற்றி வேட்பாளர் சத்யநாதனை அக்கட்சியினர் தோளில் தூக்கி ஆரவாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதன்பின்னரே அதிமுக வேட்பாளர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
வெற்றி அறிவிப்பைக் கேட்டவுடன் கதறி அழுத அதிமுக வேட்பாளரை பார்த்து கொஞ்ச நேரம் தேர்தல் அதிகாரிகள் திகைத்தனர்.
newstm.in