அதிமுக வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

அதிமுக வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Update: 2022-05-26 04:55 GMT

எம்.பி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது.

 தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கெனவே எம்பிக்களாக இருந்த ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Similar News