ஈபிஎஸ் மீது அதிமுக முன்னாள் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் !!

ஈபிஎஸ் மீது அதிமுக முன்னாள் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் !!

Update: 2022-06-15 07:15 GMT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் அண்மையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய எடப்படி பழானிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்குள்ள திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகழேந்தி புகாரளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உள்ளவர்கள் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளது என்று கூறலாம். தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் மட்டுமில்லை. நான்கு முதலமைச்சர்கள் ஆட்சி செய்து வருகின்றனர் என்று பேசியுள்ளார். 

கடந்த 4 ஆண்டுகாலமாக தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமி பற்றி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எப்போதும் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்ததில்லை. ஆனால் தற்போது முதல்வர் குடும்பத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.
ஆனால் இவ்வாறு பேசியும் தமிழகத்தில் ஆளும் கட்சி ஏன் அமைதியாக இருக்கிறது என்று தெரியவில்லை என்றார். 

எனது வாழ்நாளில் நான் தோற்கடிக்க வேண்டிய ஒரு நபர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்த அவர், ஆளும் கட்சி குற்றச்சாட்டு வைக்காத நிலையில் புகார் அளித்து வந்துள்ளீர்களே  என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நியாயம் என்ற பெயரிலேயே புகார் அளிக்க வந்துள்ளேன் என்றார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களை முதலமைச்சர்கள் என்று  அவதூறாகப் பேசியது தேசத்துரோக குற்றம் என்று கூறினார்.

newstm.in

Similar News