#BREAKING :- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் கைது.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

#BREAKING :- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீர் கைது.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

Update: 2022-04-07 14:05 GMT

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 5-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையிலும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருச்சியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம், மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி ஆகியோர் தலைமையில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, கடந்த அதிமுக. ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி, அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்களை தற்போதைய திமுக அரசு முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பட்டன.

இந்த போராட்டத்தால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அனுமதி வழங்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வளர்மதி மற்றும் அதிமுக தொண்டர்கள் உட்பட 100 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News