அதிமுக பொதுச்செயலாளர்.. இபிஎஸ்-க்கு ஆதரவாக அமமுக பிரமுகர் போஸ்டரால் பரபரப்பு !!

அதிமுக பொதுச்செயலாளர்.. இபிஎஸ்-க்கு ஆதரவாக அமமுக பிரமுகர் போஸ்டரால் பரபரப்பு !!

Update: 2022-06-07 19:16 GMT

எப்போதும் பரபரப்புக்கும், சலசலப்புக்கும் பஞ்சம் இல்லாத கட்சி என்றால் அது அதிமுக தான். ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் சரி இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அதேநேரத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இதனால் எடப்பபாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலைலயில், எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார் என தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு அருகே சுரேஷ் என்ற நபர் ஒட்டிய சுவரொட்டியால் நேற்று அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


 
இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான் பெரியகுளம் நகர செயலாளர் ராதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் அதிமுக கட்சிக்கு கலங்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவர் சுவரொட்டி ஒட்டி அவதூறு பரப்பி வருவதாகவும், அந்நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுகுறித்து பேசிய மாவட்டச் செயலாளர், சுவரொட்டி ஒட்டிய நபர் அமமுக கட்சியில் இருக்கிறார். அவர் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் தூண்டுதலின் பேரில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். அதனால் நாங்கள் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டோம் என தெரிவித்தார்.

தற்போது பிரச்சனைக்கு தற்காலிகமாக தீர்வுகண்டாலும் பல இடங்களில் இது புகைச்சலாக உள்ளது. 
newstm.in
 

Similar News