அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை.. பெரும் பதற்றம் !!

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை.. பெரும் பதற்றம் !!

Update: 2022-05-17 17:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் என்பவர் இருந்து வந்தார். இவர் தமது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில்  திருவிழா ஒன்றில் கலந்து கொண்டு காரில் வீடு திரும்பினார். 

அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவரது கார் மீது லாரியை மோதினர். இதில் கார் கவிழ்ந்ததில் அவரை நிலைகுலைய வைத்ததுடன், மனோகரை மனைவி, குழந்தைகள் கண் முன்னே அக்கும்மல் சரமாரியாக வெட்டியது. இதில் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை கொலை செய்துவிட்டு அக்கும்பல் தப்பி சென்றனர்.

இது குறித்து  தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுதுடன் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர். கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதனை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போஈசார் கைதுசெய்துள்ளனர். சுந்தரபாண்டியன், நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன் மற்றும் சூர்யா ஆகிய 9 பேரை கைதுசெய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in


 

Similar News