வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி.. அமைச்சர் பரபரப்பு புகார் !
வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி.. அமைச்சர் பரபரப்பு புகார் !
வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக சதி செய்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தையநாளில் தமிழகத்தின் கவனத்தை பெற்றது கோவை. முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர், திமுக மீது குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், கோவையில் சில இடங்களில் வாக்குப்பதிவின்போது மோதல் சம்பவங்கள் நடந்தேறின. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும்.
கோவையில் உள்ளாட்சித் தேர்தல் வழக்குப்பதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளனர். ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசியக் கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும், என அவர் கூறினார்.
newstm.in