2 முறை ஒத்தி வைக்கப்பட்ட குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக!

2 முறை ஒத்தி வைக்கப்பட்ட குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக!

Update: 2022-05-26 05:30 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி நடைபெற இருந்தது.

துரதிருஷ்டவசமாக அதிமுக - திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்ட காரணத்தால் தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைத்து உத்தரவிட்டது.

பின்னர் அதைத்தொடர்ந்து அதே மாதமான மார்ச் 26-ம் தேதி போதுமான உறுப்பினர்கள் வராத காரணத்தால் மீண்டும் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெறாமல் இழுபறி நீடித்த நிலையில், மே 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறும்போது, “காலை 9.30 மணியளவில் டி.பி.313 குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி, பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பேரூராட்சி உறுப்பினர்களின் கூட்டம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும்.

இப்பதவி தொடர்புடைய தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 5/1920-ன் ஓதுக்கீடு ஒதுக்கப்படாதவை பொது 2006-ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 98, 99-ன் படி தேர்தல் நடத்தப்படும்.  பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும்

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் தேர்தலுக்கு கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவை சார்பில் குற்றாலம் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட கவுன்சிலர் கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கவுன்சிலர் பாண்டியன் 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். மோதல் மற்றும் போதிய வார்டு உறுப்பினர்கள் வராத காரணத்தால் தொடர்ந்து 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் 3-வது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பதவியை கைப்பற்றி அதிமுக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Similar News