அதிமுக திமுகவில் சங்கமம்.. அடித்துச் சொல்கிறார் ஐ.பெரியசாமி..!
அதிமுக திமுகவில் சங்கமம்.. அடித்துச் சொல்கிறார் ஐ.பெரியசாமி..!
“எதிர்காலத்தில், அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது; அது, திமுகவில் சங்கமம் ஆகி விடும்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30 முதல் 40 சதவீத இடங்களில் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது.
இதற்கு, அதிமுகவின் தலைமை காரணம் அல்ல; அதிமுகவில் உள்ள தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து விட்டார்கள். இதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம்.
தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 80 சதவீத வாக்குகள் ஸ்டாலினுக்காக விழுந்தவை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணி தமிழகத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை. இதை உணர்ந்தே மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். காலப் போக்கில், அதிமுகவும் திமுகவில் சங்கமம் ஆகிவிடும் என்று கூறினார்.