போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அதிமுக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்!!

போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அதிமுக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்!!

Update: 2022-02-20 18:57 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திமுக வேட்பாளர் மீது புகார் அளிக்க சென்ற அதிமுக பெண் வேட்பாளரை காவல்நிலையம் புகுந்து தாக்கிய திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது

திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13வது வார்டில் வால்டர்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில்  தி.மு. வேட்பாளர் பாபு. .தி.மு. சுதா இருவரும்  வாக்காளரிடம் வாக்கு சேகரித்துள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு. வேட்பாளர் பாபு, .தி.மு. பெண் வேட்பாளர் சுதாவை எட்டி உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் கணவர் சரவணன் மற்றும் மகன்  அஷோக் இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர்.

அப்போது அங்கு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் .தி.மு. வேட்பாளர் சுதா கணவர் சரணன், மகன் அஷோக், சத்யா ஆகியோருடன் ரோசனை காவல்நிலையத்திற்கு தி.மு. வேட்பாளர் பாபு மீது புகார் அளிக்க சென்றுள்ளார்

இதனை அறிந்த தி.மு. வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்திற்குள் சென்று சுதா அவரது கணவர், மகன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து தி.மு..வினரை வெளியேற்றினர். இதனை அறிந்த .தி.மு.-வினர் நூற்றுக்கும் மேற்படோர் காவல்நிலையத்தின் முன்பு குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, டிஐஜி பாண்டியன் நேரில் விசாரனை மேற்கொண்டார். தாக்குதல் தொடர்பாக தி.மு. வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News