ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி.. உற்சாகத்தில் பஞ்சாப் தொண்டர்கள்..!
ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி.. உற்சாகத்தில் பஞ்சாப் தொண்டர்கள்..!
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 13 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் கட்சி 9 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது. ஏற்கனவே தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.
அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், துரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இதையடுத்து அவரது வீட்டின் அருகே ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்து உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.