நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்.. இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை..!
நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்.. இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் இளம் பெண் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, வாட்ஸ் அப்பில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த இளம்பெண் கேட்டுக்கொண்டதன் பேரில் தொழில் அதிபர் நிர்வாணமாக வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசியுள்ளார். இதை அந்த இளம்பெண் பதிவு செய்து வைத்துள்ளார்.
பின்னர், அந்த நிர்வாண வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று தொழில் அதிபரை இளம்பெண் மிரட்டியுள்ளார். ஆனால், தொழில் அதிபர் பணம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், அந்த தொழில் அதிபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சிலர், ‘இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்திற்கு நீ தான் காரணம். உன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது’ என்று மிரட்டி ரூ.5 லட்சம் பறித்ததாக தெரிகிறது.
மேலும், கூடுதலாக பணம் கேட்டு தொழில் அதிபருக்கு சிலர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தொழில் அதிபர், இளம் பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம் பெண் மற்றும் அவருடைய கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.