பற்றி எரிந்த ரேஸ் பைக்… இளைஞர் உயிரிழப்பு!!
பற்றி எரிந்த ரேஸ் பைக்… இளைஞர் உயிரிழப்பு!!
டிராக்டர் மீது ரேஸ் பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த உதயா என்ற இளைஞர் டுகாட்டி ரேஸ் பைக் வைத்திருந்தார். அந்த வாகனத்தில் சிறிய பழுது ஏற்பட்டது.
இதையடுத்து பழுதை சரிசெய்வதற்காக அதே இருசக்கர வாகனத்தில் நெல்லைக்குச் சென்று கொண்டிருந்தார். வாகைகுளம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே அவருக்கு முன்பாக டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, உதயா டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்தபோது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்துடன் உதயா தூக்கி வீசப்பட்டார்.
விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உதயாவும் தீயில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற டிராக்டர் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
newstm.in