கல்வித்துறை அதிரடி! இனி ஆசிரியர்களுக்கு கணிதத் தேர்வு!!
கல்வித்துறை அதிரடி! இனி ஆசிரியர்களுக்கு கணிதத் தேர்வு!!
தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி நடைபெறும் நாட்களில் ஆசிரியர்கள் சம்பளத்துடன் நேரடியாக பயிற்சியில் கலந்துக் கொள்வார்கள்.
ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தாலும், மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.இந்த நிலையில் ஆசிரியர்கள் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொள்கின்றனராஎன்பதை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி அளிக்கிறது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டகங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது.
இதில் காணொளிகள், செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியிலும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். அதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பின் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள இயலும்.
நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீண்டும் அந்த கட்டகத்தில் மீண்டும் அதே பயிற்சியை பெறுதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 9ஆம் தேதி முதுல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
newstm.in