#BREAKING:- விழுப்புரம் அருகே விபத்து.. திமுக எம்பி மகன் பலி.. சோகத்தில் கட்சியினர்..!
#BREAKING:- விழுப்புரம் அருகே விபத்து.. திமுக எம்பி மகன் பலி.. சோகத்தில் கட்சியினர்..!
விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் உயிரிழந்தார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் (22). இவர் சென்னையில் இருந்து தனது நண்பர் வேதவிகாஷ் என்பவருடன் புதுச்சேரி சென்றிருந்தார்.
இன்று அதிகாலை அவர்கள், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துபட்டு மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே ஈசிஆர் சாலையில் கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய நண்பர் வேதவிகாஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக எம்பி இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.