மொபைல் சார்ஜ் ஆகும் போது விபத்து… காவலாளி காயம்!!
மொபைல் சார்ஜ் ஆகும் போது விபத்து… காவலாளி காயம்!!
செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
சார்ஜ் போடும் போது போன் பேசக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. அப்படி பேசினால் போன் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அப்படி பல முறை செல்போன் வெடித்திருப்பதையும் கேள்விப் பட்டிருப்போம்.
அதே போல் சார்ஜில் இருக்கும் செல்போன் வெடிக்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (62) என்பவர் சென்னை சூளையில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் கடந்த 4 மாதங்களாக செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக பிள்க் பாயிண்டில் சுவிட்ச் போடும் போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு சுவிட்ச் பாக்ஸ் தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தால் ஆறுமுகத்தின் தலை, முகம், கைகள், மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in