ரூ.58,44,38,252 மதிப்பில் சொத்து குவிப்பு.. காமராஜ் வீட்டில் ரெய்டின் பின்னணி !!

ரூ.58,44,38,252 மதிப்பில் சொத்து குவிப்பு.. காமராஜ் வீட்டில் ரெய்டின் பின்னணி !!

Update: 2022-07-08 08:49 GMT

அதிமுக ஆட்சிகாலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 500%(58.84 கோடி ) சொத்துகள் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள அவரது வீடு உள்பட 49 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும்   நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது.மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாருர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) திரு.காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) Dr.M.K.இனியன், 3) Dr.K.இன்பன், 4) திரு.R.சந்திரசேகரன் 5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) திரு.S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கினை தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடைபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


newstm.in

Similar News