அதிரடி! 1,300 கிலோ கஞ்சாவை எரித்த சென்னை மாநகர போலீஸ்!!
அதிரடி! 1,300 கிலோ கஞ்சாவை எரித்த சென்னை மாநகர போலீஸ்!!
சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ கஞ்சா போதைபொருட்கள் அழிக்கப்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் பகுதியில் 37 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
ங்கர் ஜிவால், வடக்குமண்டல இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அழித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், இதுவரையில் 404 வழக்குகளில் 639 பேர் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும் தமிழகத்தில் நடைபெற்ற கஞ்சா வேட்டைகளில் அதிக அளவில் ஆந்திரா, திரிபுரா பகுதிகளிலிருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கொண்டுவந்து விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 115 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை செய்பவர்களை பற்றி தகவலறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறையினர் செல்லும்போது அவர்களும் கஞ்சா போதையில் இருப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது. சென்னையில் இதுவரையில் 224 வழக்குகள் முடிந்து 2ஆயிரம் கிலோ கஞ்சா போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
newstm.in