அதிரடி! வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல்!!
அதிரடி! வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல்!!
மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. எனவே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.
வரும் கல்வியாண்டில், 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது உண்மை தான். ஆனாலும் மாணவர்களை செல்போனை வகுப்பறைக்கு கொண்டுவரக்கூடாது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரம் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
newstm.in