அதிரடி! தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரி கைது!?
அதிரடி! தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரி கைது!?
பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் செயலாக்க அதிகாரிஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் செபி தெரிவித்தது.
மேலும், ஆனந்த் சுப்பிரமணியனை குழு செயல்பாட்டு அலுவலராக நியமித்ததில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனந்த சுப்பிரமணியன் மற்றும் தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநா் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ. 2 கோடி அபராதமும், தேசிய பங்குச் சந்தை தலைமை குறைதீா்ப்பு அதிகாரி வி.ஆா்.நரசிம்மனுக்கு ரூ. 6 லட்சம் அபராதமும் செபி விதித்தது.
மேலும், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 18 ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Anand Subramaniam, former Group Operating Officer and advisor to former MD of National Stock Exchange Chitra Ramkrishna, arrested by CBI late last night from Chennai in connection with the NSE case: Sources
— ANI (@ANI) February 25, 2022
newstm.in