அதிரடி! பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு… மீண்டும் தேர்தல்!!
அதிரடி! பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு… மீண்டும் தேர்தல்!!
பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானில் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
இம்ரான் கான் ஆட்சியில் பாகிஸ்தான் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் இம்ரான் கான் பொதுக்கூட்டம் ஒன்றை கூட்டி அதில் ஏராளமான மக்களை திரட்டி தன்னுடயை வலிமையை காட்டினார். ஆனாலும் நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது.
இந்நிலையில் இன்று இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் `எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெளிநாட்டு சதியிருப்பது என்பது அம்பலமாகியுள்ளது என்றார்.
எனவே, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
newstm.in