அதிரடி! தார் சட்டி எடுத்து இந்தி மொழியை அழிக்கும் போராட்டம்!!

அதிரடி! தார் சட்டி எடுத்து இந்தி மொழியை அழிக்கும் போராட்டம்!!

Update: 2022-04-18 06:30 GMT

ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் தார்சட்டி எடுத்து இந்தி மொழியை  அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு குறித்து பிரச்சார பெரும் பயண விளக்க கூட்டம் நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்த பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, பிரதமர் மோடி விலைவாசியை குறைப்போம், 15 லட்சம் கொடுப்போம் என்றார். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து இருக்கின்றது. தேர்தல் வரும் போது மட்டும் விலையேற்றம் இருக்காது, இதனால் அடுத்த தேர்தல் எப்போது வரும் என வடமாநில மக்கள் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

டீ விலை கூட இப்போது 15 ரூபாய்க்கு உயர்ந்து இருக்கின்றது, இது தான் மோடி செய்த சாதனை என தெரிவி்த்த அவர், நீட் தேர்வு குறித்தும், புதிய கல்விகொள்கை குறித்தும் திராவிடர் கழகம் சார்பில் சிறுவெளியீடு வெளியிடப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தேசிய கல்வி கொள்கை என்பது அசல் மனோதர்மம் எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ படிப்பிற்கு சேர சமஸ்கிருதம் தெரிந்து இருக்க வேண்டும் என்று இருந்தது, அதை ஒழித்தது திராவிட இயக்கம் எனவும் இன்று நீட் தேர்வு என்று அதை கொண்டு வந்திருக்கின்றனர் என்றார்.

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வருவொம் என அமித்ஷா சொல்கின்றார் எனவும், இந்தி  எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் கொண்டு வர பார்க்கின்றனர் எனக்கூறிய அவர், இந்திக்கு  எதிராக தார்சட்டியை தூக்கி போராடிய இயக்கம் திராவிட இயக்கம் என தெரிவித்தார்.

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் இந்த பிரச்சார பயணம் நிறைவடைந்த பின்னர்,ஏப்ரல் 30ம் தேதி மிகப்பெரிய அளவில் தார்சட்டி எடுத்து இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த அறிவிப்பை கோவையில் இருந்து வெளியிடுகின்றேன் எனவும் வீரமணி தெரிவித்தார்.

newstm.in

Similar News